Wednesday, 14 April 2021

இந்தியா-சீனா எல்லை பேச்சுவார்த்தை: சீன நிலைப்பாடு கடுமையாகி உள்ளதா?

கர்னல் ஆர் ஹரிஹரன் ஏப்ரல் 13, 2021 | சென்னை சீன ஆய்வு மையம், பிரசுர எண் 18-2021 | https://bit.ly/3s8PYOh

 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான 11 வது சுற்று பிராந்திய ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி லடாக்கில் உள்ள சுஷூல்-மோல்டோ எல்லையில் முன்னேற்றம் ஏதும் காணாமல் முடிந்தது. இந்த சந்திப்பு 13 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் நடைபெற்ற 10 -வது சுற்று சந்திப்பைப் போலன்றி, பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.  மாறாக, இரு நாடுகளும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகள், அவர்கள் அணுகுமுறை மற்றும் மனப் போக்கில் உள்ள வேற்றுமைகளையே காட்டின.


ஆகவே, லடாக் எல்லையில் தற்போதைய நிலைப்படி, ஹாட் ஸ்பிரிங்ஸ்-கோக்ரா-கொங்கா லா ஆகிய பகுதிகளில் போர் மோதல் நிகழக் கூடிய நான்கு இடங்களில் சீனா துருப்புக்களை இன்னமும் விலக்க உடன் படவில்லை. சீனாவின் ஒரு மோட்டார் போர்ப்படைப் பிரிவு, ஒரு பீரங்கி படைகள் அணி, மற்றும் ஒரு விமான் தாக்கும் ஏவுகணைப் பிரிவு ஆகியவை இப்பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளன. இது டெப்சாங்க சமவெளியில் சீனத்  துருப்புக்களின் ஆளுமை தொடரும் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, எல்லையில் எதிர்பாராத விதமாக இருதரப்பு துருப்புக்களுக்கும் மோதல் ஏற்படும் ஆபத்து இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதே யதார்த்த நிலை.

 

11-வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை முன்னேற்றம் இல்லாவிட்டாலும் எல்லையில் சுமுக நிலை திரும்பும் என்ற நம்பிக்கையை காட்டுகிறது. அந்த அறிக்கை "கிழக்கு லடாக்கில் உபயோகத்தில் உள்ள எல்லையில் படை நீக்கம் செய்வது தொடர்பான மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இரு தரப்பினரும் விரிவான கருத்துப் பரிமாற்றிக் கொண்டனர்" என்றும், "நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைவாக" தீர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டதாகவும் கூறுகிறது. மேலும், நிலைப்பாட்டில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுடன் இரு தரப்பு தொடர்புகளும் தொடரும் என்றும் குறிப்பிட்டது. இந்திய அறிக்கை எல்லைப் பகுதிகளில் படை நீக்கம் செய்யப்படுவது,  இரு தரப்பினருக்கும் இடையே உறவுகளை விரிவாக்கவும், எல்லையில் அமைதியை உறுதி செய்வதற்கும் வழிவகுக்கும் என்பதை தெளிவாக்கியது.

 

இந்திய நிலைப்பாட்டுக்கு மாறாக, சீனா பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னரே, தனது நிலைப்பாட்டை  கடினமாக்க முடிவெடுத்துள்ளது என்றே தோன்றுகிறது.  ஏனெனில், பேச்சுவார்த்தைக்கு முந்தைய தினம், அதாவது ஏப்ரல் 8 ம் தேதி அன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எல்லைப் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய நிருபர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் தெளிவாகியது.

 

அவர் விடையளிக்கையில் “சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினையில் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” மேலும் அவர் பேச்சுவார்த்தையின் வெற்றிக்கான பொறுப்பு இந்தியாவுக்குத்தான் என்றும் சீனாவுக்கு அல்ல என்ற பொருள் படப் பேசினார். இந்தியாதான் சீனாவை பாதி வழியில் சந்தித்து, இரு நாடுகளின் தலைவர்களும் எடுத்துள்ள ஒருமித்த கருத்துக்களை ஆர்வத்துடன் செயல்படுத்த வேண்டும்.  அதுவே எல்லையில் உள்ள நிலைமையை மேலும் சுமுகமாக்க, திட்ட வட்டமான நடவடிக்கைகளை எடுக்க வழி கோலும் என்று சீனா நம்புவதாகக் கூறினார்.  

 

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சீன மேற்கத்திய பிராந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த அறிக்கையும் சீன வெளியுறவுச் செய்தியாளர் சொன்ன கருத்துக்களை பிரதிபலிக்கிறது. "இரு தரப்பினரும் பரஸ்பர ஈடுபாடுள்ள  பிரச்சினைகள் குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் ராணுவ மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றின்  மூலம் தொடர்ந்து தமது தொடர்புகளைப் பேணுவார்கள். சீன-இந்திய எல்லைப் பகுதியில் பதட்ட நிலையை குறைக்க, இந்தியா தற்போது நிலைப்பாட்டில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சு வார்த்தைகளின் ஒருமித்த கருத்தை பின்பற்றி,  தனது அணுகு முறையில் சீனத் தரப்பை பாதிவழியில் சந்தித்தால், அமைதியை கூட்டாக பராமரிக்க சீனத் தரப்பு சந்திக்கும் என்று கூறினார்.  

 

இந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் இல்லாத முடிவைப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் எல்லையில் பதட்ட நிலையை குறைக்க பங்காங் த்சோ பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை வெளியேற்றிய பின்னர்,  எல்லையில் தனது நிலைப்பாட்டை சீனா கடுமையாக்கியுள்ளது என்றே தெரிகிறது.


இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சீனாவின் அதிருப்திக்கு காரணம் இந்தியா பெரும் பங்கு பெற்ற குவாட் உச்சிமாநாடா, அல்லது குவாட் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள பயிற்சிகளா என்பது தெரியவில்லை.

 

இத்தகைய தொடரும் இந்திய-சீன கசப்பான சூழலில், ஹாங்காங்கின் பிரபல ஆங்கில தினசரியான ‘தி சவுத் சைனா போஸ்ட்’ டில் வெளியான திபெத் சம்பந்தமான ஒரு செய்தி  குறிப்பிடத் தக்கது.  அந்த செய்தியின் படி, திபெத் பிராந்தியத்தில் வெளியார் ஊடுருவல் நடவடிக்கைகளைத் தவிர்க்க அந்த  பிராந்திய அரசு 15 எல்லை விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

இதன் பின்னணியாக, அந்தச் செய்தி ஒரு ‘விவரம் தெரிந்த’ சீன அரசு ஊழியரை மேற்கோள் காட்டி, "சீன அதிகாரிகளின் கூற்றுப்படி, திபெத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இந்தியாவில் கமாண்டோ துருப்புக்களாக பயிற்சி பெறுகிறார்கள்" என்று கூறியது.  கால்வான் மோதலுக்குப் பிறகு, லடாக் எல்லையில், இந்தியா எல்லையில் தனது ஆளுமையை மீட்டெடுக்க இந்திய-திபெத் எல்லைப் போலீஸ் பிரிவின் கமாண்டோ துருப்புகளை வெற்றிகரமாக உபயோகித்து குறிப்பிடத் தக்கது.  அந்த நடவடிக்கையில் நாம் உபயோகித்த திபெத்திய போலீஸ் படையினரின் தாக்குதல் கண்டு சீனாவுக்கு ஒரு வேளை இந்தியாவின் பேச்சில் நம்பிக்கை குறைந்துள்ளதா? தெரியவில்லை.

 

ஆனால் ஒட்டு மொத்தமாக, லடாக் இல்லையில் சீனப் படைகளின் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புக்கள் ஜனவரி மாத த்திற்கு பிறகு குறைந்தாலும், அந்த ஆபத்து இன்னமும் விலகவில்லை என்பதையே 11-வது சுற்று பேச்சுவார்த்தையின் பயனற்ற முடிவு காட்டுகிறது. ஆகவே,  எல்லையில் அமைதி காக்க விவேகத்துடன் செயல் பட்டாலும், இந்தியாவுக்கு எல்லையில் படைகளை தொடர்ந்து போருக்கு தயாரான நிலையில் வைத்திருப்பதைத் தவிற வேறு வழியில்லை.

 

[கர்னல் ஆர் ஹரிஹரன் தெற்காசியா மற்றும் பயங்கரவாதம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற ராணுவ நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரி ஆவார். அவர் சென்னை சீன ஆய்வு மையத்தின் அங்கத்தினர். மின்னஞ்சல்: haridirect@gmail.com வலைதளம்: https://col.hariharan.info]

Friday, 2 April 2021

Sri Lanka Perspectives – March 2021 Sri Lanka: Learning from UNHRC resolution

Col R Hariharan | March 31, 2021|

South Asia Security Trends, April 1, 2021 | www.security-risk.com

As expected, the 46th session of the UN Human Rights Council (UNHRC) adopted the resolution titled “Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka” (A/HRC/46/L.1Rec.1) with 22 countries voting for it while 11 against (for Sri Lanka) on March 23. Eleven countries including India abstained. Sri Lanka Foreign Affairs Minister Dinesh Gunawardena’s claim in parliament that it was “implicit from the voting result that the majority of the Council did not support this Resolution” would be dismissed as quibbling.

A big chunk of 10 of the 14 members of Organisation of Islamic Countries (OIC) abstained, because of issues smacking of anti-Muslim stance, like mindless resistance to allow the burial of Muslim victims to the Covid-19 and officially thinking aloud about closing down madrasas and banning of burqas. Other such actions include hounding police officers who investigated corruption cases against Rajapaksas and threatening contrarian opinion makers in the media etc did not endear members to Sri Lanka.

This was the sixth resolution on the subject tabled before the UNHRC since 2012. So, the writing in the wall is clear: Sri Lanka has not been able to address international and local concerns on promoting reconciliation, accountability and human rights in the country. It is not only Rajapaksa’s who failed in making a sincere effort to implement the resolution. The Yahapalana government bought time for three years, by co-sponsoring Resolution 30/1 but made only feeble efforts to implement it.  

The four-member core group led by UK, which drafted the resolution, appears to have been influenced by the scathing report of the High Commissioner for Human Rights Ms Bechelet. There are three key stipulations in the resolution. It requests of the Office of the High Commissioner for Human Rights (OCHR) “to enhance its monitoring and reporting on the situation of human rights in Sri Lanka, including on progress in reconciliation,” and to present an oral update to the UNHRC at its 48th session, as written update at its 49th session and a comprehensive report that includes further options for advancing accountability, at its 51st session, both to be discussed in the context of an interactive dialogue.”

It introduces a new accountability process on evidence of international crimes committed in Sri Lanka for use in future prosecutions. It establishes a dedicated capacity within the Office of the UN High Commissioner for Human Rights (OHCR) “to collect, consolidate, analyse and preserve information and evidence” of gross violations of human rights or serious violations of international humanitarian law committed in Sri Lanka and to advocate for victims and survivors and to support relevant judicial and other proceedings, including in member states with competent jurisdiction.”

However, the resolution has given Sri Lanka time till September 2023 to improve its record to meet the requirements of the resolution. But the Sri Lanka government appears to be in a defiant mood to evolve a game plan to constructively bring the resolution to a close. If this attitude is not changed, we can expect the resolution to hang like a Damocles sword over Sri Lanka’s head beyond 2023. The complexion of the UNHRC is changing as the US is now backing its efforts and India will complete its  term as a member.  There are clear indications of larger US involvement under Joe Biden’s leadership in the Indo-Pacific region as part of the Quad framework in which India will be playing bigger role. Sri Lanka needs to understand and take advantage of the changing strategic dynamics.

Sri Lanka government’s approach to the UNHRC session, even after knowing the issues that would come up, showed a lack of strategy. Answer to the simple question “how to achieve a win-win situation for Sri Lanka in the UNHRC session?” probably never figured in the minds of its leaders. Or probably it got submerged in the sophistry of sovereignty and UN charter violations.

President Gotabaya Rajapaksa, a military strategist with hands on experience in operational planning, had won the Eelam War. In spite of this, under his watch Sri Lanka’s performance at the UNHRC session was bereft of strategy. In spite of the government packed with veterans from the three services, there appear to be a lot of confusion in strategizing the approach. Of course, perhaps the disconnect between the President and the ruling Sri Lanka Podjujana Peramuna (SLPP) coalition added to the confusion.

Silicon Valley disruptive technology and innovation analyst Jeremiah Owyang explains in simple terms the difference between strategy and tactics: “strategy is done above the shoulders; tactics are done below the shoulders.” The simplistic statement hides a lot of difference between strategy as what you want to achieve and tactics as how you go about achieving it.   

If we apply this yardstick to President Gotabaya Rajapaksa’s policy statement at the opening of the 8th Parliament on January 3, 2020, his difficulties in reconciling it to the UNHRC issues of “promoting reconciliation, accountability and human rights in Sri Lanka” can be understood. His vision includes respecting aspirations of the majority of the people because “only then sovereignty of the people will be safeguarded.” He will defend the unitary status of our country and protect and nurture Buddha Sasana, “whilst safeguarding the right of all citizens to practice a religion of their choice.”

However, the President’s actions have defied safeguarding the rights of all citizens to practice a religion of their choice as well as humanitarian laws enshrined in the Geneva Convention. So, the President has to tailor his actions to meet requirements within his policy goals. That would require promoting ethnic reconciliation while recognising Sri Lanka as the home of Theravada Buddhist Sinhalas, tolerating the practise of other religions and ensure human rights are respected by rule of law with full accountability through amendment to the constitution or drafting a new one. Otherwise, Sri Lanka may well end up at the UNHRC in 2023, with yet another loss of face. That will be an avoidable tragedy

[Col R Hariharan, a retire MI specialist on South Asia and terrorism, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90. E-mail: colhari@gmail.com Website: https://col.hariharan.info]    

 

Wednesday, 24 March 2021

Quad alliance: Coming of Age

 The firming up of the Quad alliance after a decade, despite the continued differences in strategic security priorities of its four members, is related to the rise in power of Xi Jinping in China in 2012.

Col R Hariharan | Column | India Legal March 24, 2021

https://www.indialegallive.com/column-news/quad-alliance-modi-japan-quad-initiative/

 

Addressing the virtual summit meeting of leaders of QUAD – the Quadrilateral strategic grouping of the US, Japan, India and Australia – on March 12, Prime Minister Narendra Modi said: “We will work together closer than ever before for advancing our shared values and promoting a secure, stable and prosperous Indo-Pacific.” He added: “Today’s meeting shows that Quad has come of age. It will now remain an important pillar of stability in the region.”

PM Modi is probably right in celebrating the summit meeting as the coming of age of Quad, considering its transformation from a notion aired in the wake of the Boxing Day Tsunami in 2004 by the four nations, to its present avatar as a strategic framework of cooperation between four stakeholders of the Indo-Pacific. At the time of the Tsunami, the four countries formed a “core group” to coordinate their response to the disaster, but it did not progress beyond discussions due to their own strategic preoccupations.

The concept came alive briefly thereafter, as the “Strategic Global Partnership of Japan and India” when Prime Minister Shinzo Abe of Japan addressed the Indian parliament on August 22, 2007. He called it the “confluence of the two seas”, borrowing a phrase from the title of a book by Mughal Prince Dara Shikoh. It was part of Japan’s diplomatic initiative at the time “Arc of Freedom and Prosperity” to be formed along the outer rim of the Eurasian continent. It had the laudable objective of ensuring values such as freedom, democracy and respect.

However, differing strategic priorities in dealing with the booming Chinese economy set to overtake the Asian frontrunner Japan acted as a dampener to the growth of Quad. The whole world tried to woo China to do business with it. America, trying to get out of a looming economic disaster, was busy courting China as an investment destination. Japanese and Taiwanese investors queued up to make money out of China’s growing manufacturing industry to boost their exports. ASEAN countries opened up their markets for trade with China. So generally, there was a reluctance to firm up the Quad alliance as it could be construed as “ganging up” against China.

Inward-looking India, never known for making up its mind, was following the “middle path” in a bid to rebuild its stilted relations with China. It was still talking of Look East policy rather than acting upon it. The Quad concept became stillborn after Australian Prime Minister Kevin Rudd, considered a Sinophile, walked out of the amorphous “alliance” in 2009. 

The firming up of Quad after a decade, despite the continued differences in strategic security priorities of its four members, is related to the rise in power of Xi Jinping in China in 2012.

It was in the same year that China’s vague territorial claim to the whole of South China Sea (SCS) turned into aggressive action, as it seized Scarborough Shoals from the Philippines. The shoals, located 240 km from the Philippine’s main island of Luzon, and 680 km from Hainan Island of China, is rich in fishing resources. Four years later, China’s territorial claim, based on the so-called “nine-dash line”, was rejected by the international maritime tribunal. China not only rejected the ruling, but firmed up its claims to other islets in the SCS.

In the meanwhile, China aggressively went ahead creating artificial islands out of islets and coral reefs. These developments alarmed ASEAN neighbours as China’s actions blatantly disregarded the claims of not only the Philippines, but also other claimants in the SCS-Vietnam, Malaysia and Brunei.  These developments, coupled with PLA Navy warships, increased muscle-flexing in the SCS and sent notice of China’s ambition to stakeholders of the Indo-Pacific region.

It was in 2012 that President Xi conceptualised his ambitious Belt and Road Initiative, a strategic multilateral infrastructure and development initiative to link China with the rest of Asia, Africa and Europe in a bold bid to create a new world order, with the country at its helm.

Three things hastened the process of the Quad framework formation. Modi was disillusioned after his repeated attempts to build a win-win, equitable relationship with China did not yield results; President Donald Trump’s aggressive “America First” policy pursuit which increased the level of strategic confrontation with China and a change in Australian leadership after being disillusioned with China. 

The presence of Modi, Trump, Abe and Australian PM Malcom Turnbull in the East Asia Summit in November 2017 provided an opportunity for the top leadership of these countries to revive the concept of the Quadrilateral framework, in a bid to contain China. Before the leaders met, officials of the four countries held a meeting to discuss issues of common interest.

India’s Ministry of External Affairs press release after the meeting said: “The discussions focused on cooperation based on their converging vision and values for promotion of peace, stability and prosperity in an increasingly interconnected region that they share with each other and with other partners.” They agreed that a “free, open, prosperous and inclusive Indo-Pacific region serves the long-term interests of all countries in the region and of the world at large”.

After the election of Joe Biden as POTUS, there were doubts about the active involvement of the US in the Quad initiative. But these vanished after the Biden Administration acknowledged the significance of the Indo-Pacific region in its Interim National Security Strategic Guidance document released on March 3, 2021. It emphasised US commitment to the Quad, carrying forward the agenda of Trump. An Indo-Pacific coordinator has also been appointed in the US National Security to coordinate their Indo-Pacific strategy.

Having come of age with the successful conclusion of the summit meeting on March 12, how will the Quad framework grouping move forward? Given the diverse strategic priorities and national interests of the four nations, the Quad concept will be tested every time the members try to coordinate their moves in the overall interest of Indo-Pacific.

The Quad leaders’ joint statement issued at the end of the summit indicates a conscious effort to broad base their areas of cooperation and coordination and take it beyond a China-centric grouping.  The key elements of the joint statement are –

Vision: They are “united in a shared vision for the free and open Indo-Pacific. We strive for a region that is free, open, inclusive, healthy, anchored by democratic values and unconstrained by coercion”.

Strategic perspective: Commitment to promote “a free, open rules-based order, rooted in international law to advance security and prosperity and counter threats to both in the Indo-Pacific and beyond. We support the rule of law, freedom of navigation and overflight, peaceful resolution of disputes, democratic values and territorial integrity.” They emphasised the importance of a “rules-based maritime order in the East and SCS” so as not to lose sight of the current critical situation created by China’s belligerence.

ASEAN centrality: The statement refers to upholding peace and prosperity and strengthening democratic resilience based on universal values. It notes “the urgent need to restore democracy” in Myanmar and complete denuclearisation of North Korea as objectives.

Group direction beyond military cooperation: It also addressed a range of challenges including “the economic and health impacts of Covid-19”, climate change and challenges in a host of critical issues faced by the world. These include cyberspace, critical technologies, counter-terrorism, quality infrastructure investment and humanitarian-assistance and disaster relief as well as maritime domains.

Relevance to current issues: They announced a desire to “collaborate to strengthen equitable vaccine access for the Indo-Pacific, with close coordination with multilateral organizations including the WHO and COVAX”.

Action items: Harsh Vardhan Shringla, Indian foreign secretary, explained that the goal was to pool financing, manufacturing and distribution capacity to send one billion coronavirus vaccines across Asia by the end of 2022. They have also committed to create three working groups on vaccine experts, critical and emerging technology and on climate.  

If the Quad can live up to the key elements of the joint statement, and transform these into action, its future can be bright. Otherwise, it can get bogged down in the bilaterals of member nations with China and among themselves. As of now, the members have shown a lot of energy in taking forward the understanding arrived in March. Australia is contributing $77 million for the provision of vaccines and the last mile delivery support with focus on Southeast Asia. This will be in addition to its existing commitment of $407 million to regional vaccine and healthy security coverage to nine Pacific island countries and Timor-Leste. Japan will be providing grant-in-aid of $41 million and concessional yen loans for purchase of vaccines and cold chain support in developing countries. The US is leveraging its existing programmes to boost vaccination capability, with at least $100 million in regional efforts on immunisation. India is pitching in with additional manufacture of Covid vaccines with the assistance of the US and Japan.

Of course, in the midst of all this, the centrality of China continues to be relevant to Quad. This was illustrated during US secretary of defence Lloyd James Austin III’s three-day visit to New Delhi after the summit to discuss defence-related issues, including Chinese threat on the borders. The navies of India, the US, Japan and Australia are joining France for its “La Perouse” exercise in the Bay of Bengal from April 4 to 7. And more are to follow.

The writer is a military intelligence specialist on South Asia, associated with the Chennai Centre for China Studies and South Asia Analysis Group.

 

Thursday, 4 March 2021

வளரும் சீனா-பாகிஸ்தான் பாதுகாப்பு உறவுகள், எவ்வாறு இந்திய-பாகிஸ்தான் உறவை பாதிக்கும்?

கர்னல் ஆர். ஹரிஹரன் | மார்ச்சு 4, 2021 | சென்னை சீன ஆய்வு மையம், பிரசுர எண் 10-2021 | https://cutt.ly/BzwtkLp

லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே பத்து மாதங்கள் தொடர்ந்த பதட்ட நிலை, உயர் மட்ட ராணுவ அதிகாரிகளிடையே பதினோரு சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, ஓரளவு தற்போது குறைந்து வருகிறது. இந்த முடிவை அமைதியை வேண்டும் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். 

ஆனால், தற்போதைய அமைதி தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் மீது மோடி அரசு வைத்திருந்த நம்பிக்கையை சென்ற ஆண்டு லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதல்கள் சிதைத்து விட்டன. 

சென்ற ஆண்டு, அதிபர் ஷீ இந்தியாவின் நல்லுறவை மெத்தனமாக மதித்து, ஒப்பந்தங்களுக்கு மாறாக சீனப்படைகளை எல்லையில் குவித்து இந்தியாவை பயமுறுத்தி பார்த்தார். ஆனால், இந்தியா அதை முறியடிக்க எடுத்த பல முனை முயற்சிகளால், சீனா எல்லையில் இரு தரப்பு படைக்குறைப்புக்கு ஒப்புக் கொண்டது. 

இதை இந்தியாவின் வெற்றி என்று கொண்டாடுவது தவறு. ஆனால், இந்த எல்லை சம்பவம், இந்தியாவால் சீனாவுக்கு உண்டான மானப் பிரச்சனை என்பதை சீனா எளிதில் மறக்காது. 

ஆகவே, அடுத்த முறை, சீனா எவ்வாறு நமது நாட்டின் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம். ஏனெனில், கடந்த ஓராண்டில் உலக அளவில் பாதுகாப்பு சூழ்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இமையத் தட்டில், இந்தியப் படைகளுக்கு வலிமை சேர்க்க, அரசு பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது முக்கியமாகும். அவற்றில், எல்லைப் பகுதியில், இது வரை கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை விரிவாக்க திட்டங்களை முடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அது போலவே, இந்திய விமானப் படைக்கு ரஃபேல், தேஜஸ் ஆகிய போர் விமானங்கள், மற்றும் எதிரி விமானங்களைத் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணைகள் ஆகியவற்றை அளித்து போர்த்திறனை அதிகரித்துள்ளது. அது போலவே, முன்னணியில் உள்ள படைகளுக்கு, புதிய பலம் வாய்ந்த பீரங்கிகள், போர் முனையை கண்காணித்து உடனுக்குடன் தாக்குதல் நடத்தக்கூடிய அமெரிக்க ட்ரோன் தானியங்கிகள் ஆகியவற்றை அளித்துள்ளது. 

இதெல்லாவற்றையும் விட, இந்திய-பசிபிக் கடல் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சீன ஆதிக்கத்தை எதிர் கொள்ள, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூடி அமைத்துள்ள குவாட் கட்டமைப்பின் செயலாக்கம், அந்த நாடுகளுக்கு இடையே போர் முனை ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. 

ஆகவே, அடுத்த முறை சீன-இந்திய "மோதல்",  எல்லையில் தோன்ற வேண்டிய அவசியம் இல்லை. அதை வேறு எந்த ரூபத்தில் சீனா எதிர் கொள்ளும்  என்று அனுமானிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்தகைய முயற்சி வெற்றி அடைய, சென்ற ஆண்டு சீன-பாக் உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை, சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம். அதற்கு, இரு நாடுகளும் ஒருங்கிணைந்த தமது செயல்பாடுகளை பாதுகாப்பு, வெளியுறவு, மற்றும் பன்னாட்டு வணிகம் ஆகிய துறைகளில் உபயோகித்து, இந்தியாவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், அழுத்தம் கொடுக்கலாம். 

இரண்டு நாடுகளும் தங்களுக்க சாதகமான சூழ்நிலையை உண்டாக்க, இந்தியாவுக்கு தங்கள் அமைதிக்கரத்தை நீட்டுவதை ஒரு உத்தியாக கையாளலாம். அவ்வாறுதான், இரு நாடுகளும் இந்தியாவுடன் பல்வேறு கால கட்டங்களில் இரட்டை வேடம் போட்டதாக சரித்திரம் கூறுகிறது. 

உதாரணமாக, அதிகம் பாராட்டப்பட்ட மோடி-ஷீ மகாபலிபுரம் சந்திப்பு நிகழும் போதே, லடாக் எல்லையில் சீனப்படைகளை ஊடுருவச் செய்து, ஷீ இந்தியாவின் தயார் நிலையை ஆழம் பார்த்தது  நமது நினைவில் நீங்காது. ஆகவே,  வரும் செப்டம்பர் மாதம், ஷீ இந்தியா வருகிறார் என்ற செய்தியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

அது போலவே, பாக் அதிபர் ஜெனரல் முஷாரப், இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் நல்லிணக்கம் காட்டி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அது முறிந்தது. ஐந்தாண்டு அமைதிக்கு பின், 2008ல் பாகிஸ்தான் ஐ. எஸ். ஐ உளவுத்துறையை உபயோகித்து, ஜிஹாதி தீவிரவாதிகளை மும்பையில் ஊடுருவி 26/11 தாக்குதல்கள் நடத்தி பேரிழப்பு ஏற்பட்டுத்தியதை எளிதில் மறக்க முடியாது. இன்றும், அந்தத் தாக்குதலை திட்டமிட்ட தீவிரவாத தலைவர்கள், சுதந்திரமாக பாகிஸ்தானில் உலவி வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை. 

இத்தகைய சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி 3ம் தேதி, பாக் ராணுவத்தின் தலைவரான ஜெனரல் கமார் பாஜ்வா ஒரு ராணுவ பயிற்சி மையத்தில் பேசுகையில், பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு என்றும், அதற்காக பிராந்திய மற்றும் உலக அளவில் பல தியாகங்களை புரிந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பாஜ்வா, நெடுங்காலமாக  உள்ள ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை குறிப்பிட்டு, காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். 

ஜெனரல் பாஜ்வாவின் பேச்சு இருநாடுகளிலும் அமைதி வேண்டி காத்திருக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு பாக் பிரதமர் இம்ரான் கான் பேசும் போது, இந்தியாவை குறிப்பிட்டு "வாருங்கள், எங்களுடன் காஷ்மீர் பிரச்சனையை தீருங்கள். அதற்கு, முதலாவதாக, நீங்கள் மீண்டும் சட்டத் திருத்தம் 370ஐ நடைமுறைப் படுத்துங்கள். அதன் பிறகு, எங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துங்கள். பிறகு, ஐ. நா. கட்டமைப்பின் தீர்மானத்தின் படி, காஷ்மீர் மக்களுக்கு அவர்கள் உரிமையை அளியுங்கள்" என்று கூறினார். 

இதை, வரவேற்ற பல இந்திய ஊடக ஆய்வாளர்கள், பாக் பிரதமர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறார் என்று கணித்தனர். அதற்கு ஏற்றவாறு, மேலும் இரண்டு நாட்களுக்கு பிறகு, பாக் பிரதமர் தனது இலங்கை விஜயத்தின் போது, பாகிஸ்தான் இந்தியாவுடன் சுமூக உறவையே நாடுவதாகவும், அதற்கு காஷ்மீர் பிரச்சனை ஒன்றே தடையாக நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஊடகச் செய்திகள் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மீண்டும் பஞ்சு இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டன. இந்தியாவுடனான வியாபார உறவை பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக, இந்தியாவின் பாலாகோட் விமான தாக்குதலுக்குப் பின்பு, நிறுத்தி இருந்தது. இது சுமூக சூழ்நிலையை ஏற்படுத்த பாகிஸ்தான் காட்டும் இன்னொரு சமிக்ஞையா? 

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பிப்ரவரி 25ந் தேதி அளித்த அறிக்கையில், இந்திய-பாகிஸ்தான் ராணுவங்களின் போர் முறை பொது இயக்குனர்கள், "ஹாட் லைன்" என்ற நேரடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காஷ்மீர் எல்லையைப் பற்றிய தங்கள் கருத்துக்களை, பரிமாறிக் கொண்டதாக கூறியது.

அதன் பின், இரு தரப்பும் மற்றவர் கருத்துக்களை புரிந்து கொண்டு, எல்லையில் அமைதிக்கான சூழ்நிலையை மீண்டும் தொடர முடிவெடுத்தனர். அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களை கண்டிப்பாக எல்லைக் கோட்டில் 24/25 பிப்ரவரி இரவில் இருந்து நடைமுறையாக கடைப்பிடிக்க முடிவு செய்ததாக, அந்த அறிக்கை கூறுகிறது. 

அதைத் தொடர்ந்து, எல்லையில் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவற்றை நேரடி தொலைபேசி மூலமும், அல்லது எல்லையில் உள்ள ராணுவ தளபதிகள் "கொடி" சந்திப்பின் மூலமாகவும் தீர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

ஆனால் இத்தகைய உயர்மட்ட ராணுவ நேரடி தொலைபேசித் தொடர்புகள் 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்தன. அவற்றில் இரு நாட்டு ராணுவத் தலைவர்களும் அமைதி காக்க ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அவை குறுகிய கால கட்டத்தில் நீர்த்துப் போயின. 

அதற்கு முக்கிய காரணம், தீவிரவாதிகளை உபயோகித்து இந்திய ராணுவப்படையினரை, அணு அணுவாக அழிப்பதை பாகிஸ்தான் தனது அடிப்படை போர் உத்தியாக உபயோகிப்பதே ஆகும். பாக் ராணுவம் அந்த நாட்டு வெளியுறவு, முக்கியமாக இந்திய உறவை, தனது செயல்பாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆகவே அதன் ஒப்புதல் இல்லாமல் பாக் அரசு, தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக உபயோகிப்பதை நிறுத்த முடியாது. 

இந்தச் செய்திகள், இந்திய பாகிஸ்தான் உறவில் அமைதிப் பேச்சுவார்த்தையின் துவக்கத்தை காட்டுகின்றனவா? பாகிஸ்தான் தலைமை ஏன் அமைதியை பற்றி தற்போது பேசுகிறது? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்? இப்படி நம் முன் பல கேள்விகள் எழுகின்றன. 

அவைகளைப் புரிந்து கொள்ள, இரு நாடுகளின் உறவின் சரித்திர பின்னணியை புரிந்து கொள்வது மிக அவசியம். தற்போது, சீனாவின் தலையீடு பாகிஸ்தானின் அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் 2013ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சி. பி. இ. சி எனப்படும் "சீன-பாகிஸ்தான் பொருளாதார பெருவழித் திட்டம்", சீனா உலக அளவில் கையெடுத்துள்ள "பெல்ட் அண்ட் ரோடு" (பி. ஆர். ஐ) இணைப்பு திட்டத்தின் மிகப் பெரிய அங்கமாகும். 

அதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பாக் எல்லையில் ஓரளவு அமைதி நிலவினால்தான், சீனா அதில் முன்னேற்றம் காண முடியும். இந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டுவிழா கொண்டாடப்படும். அந்த வேளையில் பி. ஆர். ஐ திட்டத்தின் மணிமகுடமான சி. பி. இ. சி திட்டத்தின் வெற்றிகாண வேண்டிய நெருக்கடி அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு ஒரு சவாலாக உள்ளது. 

அந்த சவாலை சந்திக்க, பாகிஸ்தானில் சீனா பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சி. பி. இ. சி. கட்டமைப்பின் தலைமையை பாக் ராணுவத்தின் கையில் மாற்றியதற்கு சீனாவின் அழுத்தமே காரணமென்று கூறப்படுகிறது. 

ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், இந்தியா பாக் எல்லையில் முழு அமைதி, பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது பகல் கனவாக முடியலாம். இது வரை, இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன. அந்த நிலைப்பாடு தொடரும் என்று எதிர்பார்க்கலாம். 

[கர்னல் ஆர் ஹரிஹரன் ராணுவ நுண்ணறிவுத் துறையில் தெற்காசிய மற்றும் தீவிர வாதம் ஆகிய பிரிவுகளில் போர் முனை அனுபவம் பெற்றவர். ஈமெயில்: haridirect@gmail.com வலைதளம்: https://col.hariharan.info

 

Wednesday, 3 March 2021

Sri Lanka Perspectives – February 2021: A month of forgettable performance

Col R Hariharan | February 28, 2021|

South Asia Security Trends, March 1, 2021 | www.security-risk.com

Overview

If the happenings during the month in Sri Lanka are any indication, the government of President Gotabaya Rajapaksa, voted to power by 6.9 million Sinhalas to restore Sinhala pride and Buddha Sasana as he claims, did not cover itself with glory. This was evident in the government conduct on three issues which peaked during the month – troubled ethnic relations, the handling of the United Nations Human Rights Council (UNHRC) meeting on Sri Lanka’s human rights accountability, and challenges of governance. Perhaps, the bonhomie showed by visiting Pakistan Prime Minister Imran Khan, despite accusations of Islamophobia voiced by Muslim minority, was the only moment of cheer for the government.

Significance of P2P march

Perhaps for the first time since the 70s, Tamils of all hues – Jaffna and Easterners, Muslims and Tamils of Indian origin (Up country Tamils) - came together, across political affiliations, to march peacefully for five days to voice their demands. They covered a distance of 750 km from the eastern town of Pottuvil to Polikandy in Jaffna in the North, to draw attention to demands, ignored by successive governments, as well as concerns on current issues.

The march held from February 3 to 9, now embedded in Tamil lore as P2P, did not draw much attention in mainstream media, though Tamil media estimated the participation of a thousand people.  Apparently, it was timed to draw international attention on the eve of the UNHRC meeting slated to discuss Sri Lanka’s human rights accountability issue. The proceedings of the UNHRC session, so far, indicates they had achieved their aim. 

The P2P march is a watershed moment for a number of reasons. For the first time, besides Tamils from north and east, plantation Tamils and Muslims had joined hands to project their demands peacefully.  It was led by civil society organisations, with Tamil and Muslim political parties taking a back seat.

Slogans raised at the march voiced, much more than longstanding demands of Tamils of North and East, like forcibly disappeared, vacation of land under occupation of security forces and release of LTTE suspects still in custody without due legal process. They also protested against denial of burial rites to Muslim victims of Covid pandemic, continued recourse to Prevention of Terrorism Act (PTA), denial of minimum wage of Rs 1000 per day to plantation Tamils and aberrations of Sinhala majoritarian rule against minorities. This would indicate, the patience of minority population is wearing thin over the government’s continued indifference to their grievances. This increases the likelihood of minority politicians coming together for making common cause to build upon the Tamil idiom to further their political aspirations. 

Two mainstream political parties the SJB (clone of its parent UNP) and the JVP - came out in support of the Tamil marchers. Prime Minister Mahinda Rajapaksa who is politically savvy, would remember that the P2P was reminiscent of the early 70s, when Tamils started projecting their demands for autonomy peacefully. It later snowballed into satyagraha movement under Dr SJV Chelvanayakam's leadership and opened the gates for Tamil separatist struggle.   

Wasted opportunity at UNHRC

The four-week long 48th session of the UNHRC conducted virtually, has so far gone according to script. HR Commissioner Michelle Bechelet's report (analysed last month in Sri Lanka Security Trends) was taken up for discussion, with 40 countries presenting their views in the interactive dialogue that followed.

Foreign Minister Dinesh Gunawardane’s address was largely defensive, trying to counter Ms Bechelet’s report with recycled arguments, rather than breaking new ground to tone down the damage caused by the report. He said her report has “unjustifiably broadened its mandate and scope” to incorporate many issues of governance and matters that are essentially domestic, and dismissed the previous resolutions brought at the UNHRC as politically motivated. Few would be convinced by his argument that the former Sri Lanka government decision to co-sponsor UNHRC Resolution 30/1 resulted in compromising national security, which eventually led to the Easter attacks of 2019.

Representatives of the UK, Germany, Canada, Norway and the US shared the concerns raised by the OCHR and called upon Sri Lanka to share a time table for the implementation of the recommendations mentioned in the report. 

India did not allow the recent hiccups in its relations with Sri Lanka to highlight the core aspects of Sri Lanka’s human rights issue. India’s Permanent Representative, Indra Mani Pandey, noted that India was an active participant in the discussions on the seven resolutions on the question of human rights in Sri Lanka since 2009 and Sri Lanka remained a close friend and immediate neighbour.

“We believe that respecting the rights of the Tamil community through meaningful devolution contributes directly to the unity and integrity of Sri Lanka.” Therefore, she added India advocated “delivering on the legitimate aspirations of the Tamil community is in the best interest of Sri Lanka.” India called upon Sri Lanka to take steps to address such aspirations through reconciliation and full implementation of the 13th Amendment to the Constitution.

Sri Lanka is worried about the new draft resolution put forward by the Core Group led by UK, which would be voted on March 22. Sri Lanka would consider certain comments and clauses of the draft resolution as provocative. For instance, it takes note of the passage and operationalisation of the 20th Amendment to the Constitution, counsels the government to respect local governance including holding of elections to provincial councils and ensure they are able to operate effectively, in accordance with the 13th Amendment.

It asks Sri Lanka to provide sufficient resources and technical means for effective functioning of the Office on Missing Persons and the Office for Reparations and stresses the importance of maintaining support to these institutions, “safeguarding their independent functioning.”

It expresses serious concern over emerging trends over the past year, which “represent clearly early warning signs of a deteriorating human rights situation in Sri Lanka, including the accelerating militarization of civilian functions, erosion of the independence of the judiciary and key institutions responsible for the promotion and protection of human rights, ongoing impunity and political obstruction of accountability for crimes and human rights violations in emblematic cases.”

Presumably, the draft resolution would be toned down in its final form; but the writing on the wall is clear - Sri Lanka cannot do business as usual, if it wants to maintain its win-win relations with its traditional Western allies. India in 2010 had provided valuable support to Sri Lanka in the UNHRC in shaping the final resolution. With China assuring Sri Lanka its support in international forums, how would India handle Sri Lanka’s request for help in the UNHRC, remains to be seen when the final resolution takes shape.  

Future

Alan Keenan of the International Crisis Group summed up the situation in Sri Lanka in his paper, The Rajapaksa family’s return to government has put an end to tentative efforts to address the legacy of civil war and brought in more centralised, militarised government, anchored in Sinhala majoritarianism. As Sri Lanka’s longstanding ethno-religious tensions continue to linger, the presence of hard-line Sinhala nationalists in power rules out any accommodation of Tamil political claims. Once-fringe ideas of militant Buddhist groups regarding violence and hate speech against Muslims are increasingly being adopted as government policy.”

The Rajapaksa government has so far shown neither the willingness, nor the ability, to tackle these issues dispassionately. The Rajapaksas weakest link is the ineptitude in handling foreign relations, which has caused maximum damage to the country. This was seen in all critical situations: continued insensitivity in handling India’s concerns, embarrassing the new US administration by undiplomatic comments, and clumsiness in handling Prime Minister Imran Khan’s visit to Colombo and the inability to strategize the approach to the UNHRC session. The after effects of this weakness is likely to impact the country in the coming months.

[Col R Hariharan, a retire MI specialist on South Asia and terrorism, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90. E-mail: colhar@gmail.com Website: https://col.hariharan.info]    

 

Friday, 19 February 2021

India and security dynamics of the Quad: Q & A

Col R Hariharan | South Asia Analysis Group Paper No 6756, 19-2-2021

http://www.southasiaanalysis.org/node/2756


The third ministerial meeting of the Quadrilateral alliance members being held now, has evoked a lot of interest. Here are my answers to two questions raised by an international news agency on India’s perceptions on the QUAD, particularly in the context of current downslide in the relations between India and China.

Question 1

Certain news reports have suggested that the US is keen on holding a leadership level discussion within the Quad framework.

Is it possible to understand what possible backlash could it have for India, from China? New Delhi and Beijing recently completed a troop withdrawal plan from a face-off site at the disputed land border between the two countries?

Answer 1

Future of America's fractured relations with China is one of the challenging issues President Joe Biden is facing. It will have far reaching effects, not only on US strategic security, trade and economy, but also on America's global leadership role.

President Xi Jinping is trying fast to realise his Chinese Dream of creating a new world order, where China hopes wrest the leadership role from the US and its allies. This has made Indo-Pacific theatre the hot bed of the emerging Cold War 2.0 taking shape now.

Cold War 2.0 will be unlike the "us versus they" of America's earlier version, with less distinct contours of participants and type of warfare. It will be impacted by use of technology to wage hybrid warfare fought on multiple fronts, with no clear beginning or end. 

President Donald Trump's decisions to further American exceptionalism during his tenure, had come at the cost of side lining some of the traditional allies in Europe and Asia Pacific.

In spite of this, Biden administration probably appreciates Trump's initiative to promote the 4-nation Quadrilateral security initiative (QUAD) to check China's rapid inroads into the Indo-Pacific theatre and beyond. The future of QUAD under Biden leadership needs to be examined in this broad framework. 

QUAD initiative is in the making. So far, only two formal ministerial level meetings of member countries had taken place and the third one is in the making. Each member has its own strategic priorities, not only in their bilateral relations with China, but also its impact multilaterally, because China has globally increased its strategic and economic muscle power. 

So, we can expect the present ministerial meeting to focus on understanding the Biden administration's perspective on QUAD's shape and scope. This will provide an opportunity for Americans to understand the perceptions of member countries, particularly India and Japan, which have been experiencing the effects of PRC’s confrontation politics.

The US has other concerns beyond QUAD and Indo-Pacific theatre, in its larger spectral relationship with China. So the US may not be in a rush to assume leadership role of QUAD, unless it has a well-structured outline of the organisation and the issues it is likely to confront. 

So, I do not see "backlash" effect on QUAD in India-China talks, just because of US' leadership change, as it would have already been factored in their security perception. Bilaterally, Biden administration has already expressed its solidarity with India on the LAC issue in Ladakh. It has also rushed to fulfil urgent military equipment requirements of India to beef up its operations there. 

Question 2

I am also hoping to know how you see India's role in the QUAD, particularly in the South China Sea. Would a greater role for India serve its interests, like they serve US?

Answer 2

India sees QUAD as part of its overall strategic security scheme to protect its national interests. In this overall framework, as far as South China Sea is concerned India has two commitments. First, to ensure international sea lanes are free in terms of UNCLOS and respond appropriately to any threat to it. Secondly, it has established strong strategic security links with Vietnam and Japan and some of the members of ASEAN and it can be expected to respond suitably to assist them. On these issues, by and large, there is a lot of convergence between India and USA. 

So, India is likely to further its role in South China Sea in the larger context of Indo-Pacific, particularly as a dominant naval power of Indian Ocean, with ability to deal with any external threat to its interests. 

[Col R Hariharan served as MI specialist on South Asia and terrorism and insurgency for nearly three decades. He is associated with the Chennai Centre for China Studies and the South Asia Analysis Group. E-mail: haridirect@gmail.com Website: https://col.hariharan.info ]